திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கழிவுநீர் வாகனம்

திருமங்கலம், ஏப்.4: திருமங்கலம் நகராட்சியில் வீடுகள்,வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிலுள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் நிரம்பினால் அவற்றை இதுநாள் வரையில் தனியார் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் மூலமாக அள்ளப்பட்டு வந்தது. இவர்கள் நகராட்சி அனுமதியுடன் அனைத்து பகுதிகளிலும் நிரம்பும் கழிவுநீரினை தங்களது வாகனங்கள் மூலமாக அள்ளி அகற்றி வந்தனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசு 40 சதவீதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் மற்றும் நகராட்சி நிதி 20 சதவீம் மூலமாக திருமங்கலம் நகராட்சிக்கு புதியதாக நவீன சுகாதார கழிவுநீர் உறிஞ்சு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தினை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிலுள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பினால் அழைத்து எடுத்து கொள்ளலாம்.

குடியிருப்பு பகுதி அதாவது வீடு ஒன்றில் நடை ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வணிக பயன்பாடுகள் எனில் நடைஒன்றிற்கு ரூ.2500வும், அரசு பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் எனில் நடை ஒன்றிற்கு ரூ.1500 கட்டணமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

The post திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கழிவுநீர் வாகனம் appeared first on Dinakaran.

Related Stories: