மேலூர், ஏப்.4: மேலூர் அருகே விவசாயிகளுக்கு தழைக்கூளம் குறித்து வேளாண் கல்லூரி மாணவி விளக்கமளித்தார். மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவி இலக்கியா கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் கீழ் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் தழைக்கூளம் பற்றிய பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயத்திற்கு தழைக்கூளம் எவ்வளவு முக்கியம், எப்படி பயன்படுத்துவது என்பதை எளிமையாக விளக்கி கூறினார்.
அவர் கூறியதாவது: பல வகையான தழைக்கூளம் உள்ளது. அதில் இலை மூடாக்கு, உயிர்மூடாக்கு, வண்ண தழைக்கூளம் சருகு மூடாக்கு, கல் மூடாக்கு போன்ற தழைக்கூளம் உள்ளது. தழைக்கூளம் போடுவதால், அது மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. மண் வளத்தை அதிகரிக்கிறது. மண்ணின் குறைகளை சரிப்படுத்தி, வளத்தையும் தக்க வைக்கிறது என்றார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை பெற்றனர்.
The post மேலூர் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
