சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.