திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு

திருவாரூர. ஏப்.3: திருவாரூர் மாவட்ட முழுவதும் 71 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதற்காக 71 தேர்வு மையங்களிலும் 71 நிலை கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆங்கில பாடத்திற்கான தேர்வினை 7 ஆயிரத்து 482 மாணவர்களும், 7 ஆயிரத்து 646 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் எழுதினர். 494 பேர் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. மேலும் நாளை (4ந் தேதி) விருப்ப மொழி பாடத்திற்கான தேர்வும், 7ந் தேதி கணித பாடத்திற்கான தேர்வும், 11ந் அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறும் நிலையில் 15ந் தேதிநடைபெறும் சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வுடன் இந்த 10ம் வகுப்பு பொது தேர்வானது முடிவடைகிறது. மேலும் இந்த 10ம் வகுப்பு பொது தேர்விற்கான வினாத்தாள்கள் அனைத்தும் 4 கட்டுக்காப்பு மையங்களிலும் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதுடன் இத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் மட்டுமின்றி கண்காணிப்பு குழுவினரும் பணியில் ஈடுபடுகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: