தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக கால்நடை மருத்துவர் பணி கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர், ஏப்2: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் முலம் கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு, தரமான கால்நடை மருத்துவ வசதி அளிக்கவும், செயற்கை கருவூட்டல், சினைபரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்கவும், ஒன்றியத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டிற்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், தங்களின் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் வருகின்ற 10.04.2025 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நேரடியாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக கால்நடை மருத்துவர் பணி கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: