சென்னை: வள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகளின் கட்டுமான வடிவமைப்பு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி படகுத்துறையின் மூலம் 2023-24ம் ஆண்டில் ரூ.5.2 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் 21.36 லட்சம் பேர் பயணம் செய்ததன் மூலம் ரூ.3.3 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் எதிர்நோக்கப்பட்ட மதிப்பீட்டின் படி 20.53 லட்சம் பயணம் செய்து ரூ.9.31 கோடி லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகளின் கட்டுமான வடிவமைப்பு..!! appeared first on Dinakaran.