திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தி டைரி ஆப் மணிப்பூர் படத்தில் நடிக்க, மோனலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். காந்திகிரி, ராம் கி ஜென்மபூமி, லபாங்கே நவாப், தர்ம் கே சவுதாகர் மற்றும் காஷி டு காஷ்மீர் உள்ளிட்ட பல படங்களை சனோஜ் மிஸ்ரா இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தனக்கு சினிமா வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பல ஓட்டல்களுக்கு வரவழைத்ததாகவும், அங்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் காரணமாக பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும், தனக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 28 வயது பெண் காவல் துறையில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து டில்லி நீதிமன்றத்தில் சனோஜ் மிஸ்ரா, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து டெல்லி காவல்துறையினரால் சனோஜ் மிஸ்ரா நேற்று கைது செய்யப்பட்டார். இவர்மீது ஏற்கனவே சில பெண்கள் புகார் கூறியுள்ளதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு தந்த டைரக்டர் கைது: பாலியல் பலாத்கார புகாரில் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.