இவர்கள் மாடல் அழகிகளை வரவழைத்து அவர்களின் ஆபாச படங்களை வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோக்களை சைப்ரஸ் நாட்டின் நிறுவனமான டெக்னியஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். இந்த சைப்ரஸ் நிறுவனம் குறிப்பிட்ட ஆபாச வலைதளங்களை இயக்கி வருகிறது. அதனால் அந்த தம்பதி மீது அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வயதுவந்தோர் ஆபாச படங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆதாயம் பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15.66 கோடி மதிப்புள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இது தவிர, நெதர்லாந்தில் இருந்தும் பணம் வந்துள்ளது. அந்நாட்டின் டெக்னியஸ் லிமிடெட் நிறுவனத்தால் சுமார் ரூ.7 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் சர்வதேச டெபிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் ரொக்கமாக எடுக்கப்பட்டதும், மொத்த வருவாயில் 75 சதவீதத்தை தம்பதியினர் வைத்திருந்ததும், மாடல் அழகிகளுக்கு ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொடுத்ததும் தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்ட தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, மாடல் அழகிகள் சிலர் இருந்தனர்; அப்போது அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது, மேலும் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.16 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம்; அழகிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாடுக்கு சப்ளை செய்த தம்பதி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.