முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

முத்துப்பேட்டை, மார்ச் 30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை தலைவி பிரியதர்ஷினி, தலைமை ஆசிரியை தனபாக்கியம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். கிராம வாசிகள் பள்ளி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் வாழ்த்தி பேசினர்.

விழாவில் இலக்கிய மன்றப் போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

The post முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: