ஜெயங்கொண்டம், மார்ச் 30: ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி முதல்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சிவங்கர், தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளதன் மூலம் உயர்கல்வி பயி லும் மாணவிகளின் எண்ணி க்கை 85 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி தொடங்கிய 2020-2023 மற்றும் 2021-2024 ஆகிய ஆண்டுகளில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், இளம் அறிவியல் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளில் கல்வி பயின்று கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று (29ம் தேதி) நடைபெற்றது. விழாவில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டனர்.
விழாவில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 340 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், அமைச்சர் பேசியதாவது:கல்லூரி படிப்பு முடித்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவம் படி க்கலாம் என்ற சட்டம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த சட்டங்களையெல்லாம் மாற்றி இன்று எல்லாரும் கல்வி பெறலாம் என்ற நிலை உருவாகி தமிழ்நாட்டில் ஒரு பெரிய கல்விப்புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மற்ற பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. அதனை 50 சதவீதமாக உயர்த்திட இந்திய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தமி ழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையானது ஏற்கனவே 52 சதவீதமாக உள்ளது.
எல்லோரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். பெண்கள் கல்வி கற்றால் சமூகம் முன்னேற்றம் பெறும் என்ற அடிப்படையில், மாணவிகள் படிப்பினை கைவிட்டுவிடக்கூடாது தொடர்ந்து உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கும் ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்திய பிறகு உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது. மேலும், அதிகளவில் பெண்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வந்திருப்பதாகவும் மாநில திட்டக்குழுவின்ஆய் வில் வெளிவந்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வரும் வகையில் புதிய தொழிற்சாலைகள்தமி ழ்நாட்டில் கொண்டுவரப்படு கிறது. அதன் மூலம்வேலை வாய்ப்பிற்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வேலை வழங்கும் நிறுவனங்கள் மாணவ, மாணவிகளிடம் எதிர்பார்க்கின்ற திறன்களை மேம்படுத்துவதற்காக நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.இவ்வாறு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் சம்பத்குமார், கல்லூரி அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் செயல்படுத்தியுள்ள புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 85% உயர்ந்துள்ளது: அரசுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.
