ரூ.4034 கோடி நிதி வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 30: ரூ.4034 கோடி நிதி வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல், தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் திமுக பொருளாளரும், மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இக்கூட்டத்தில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வந்தேமாதரம், மாங்காடு நகர செயலாளர் பட்டூர் எஸ்.ஜபருல்லா, பொதுக்குழு உறுப்பினர் கே.எத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 20 இடங்களில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் விபரம்: புனித தோமையர்மலை வடக்கு ஒன்றியம் பொழிச்சலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஜி.கே.ரவி பங்கேற்றனர். பொழிச்சலூர், திரிசூலம், மூவரசம்பட்டு, கவுல்பஜார் முடிச்சூர் – லட்சுமி நகர் பேருந்து நிலையம் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம்தென், மதுரப்பாக்கம், காட்டாங்குளத்தூர், தெற்கு ஒன்றியம் ஆலப்பாக்கம் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்,ஆலப்பாக்கம், பட்ரவாக்கம், குண்ணவாக்கம், வல்லம், பெரியபொத்தெரி, ஓழலூர், திருவடிசூலம், மேலைமையூர், ஆலப்பாக்கம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், பழவேலி சிங்கபெருமாள் கோயில் – ஜி.எஸ்.டி.சாலை ஒன்றிய செயலாளர் ஆப்பூர்.பி.சந்தானம் ஆகியோர் தலைமையில் நடந்தது.

காயிரம்பேடு, கருநீலம், கொண்டமங்கலம், ஆப்பூர், ஊரப்பாக்கம் – ஜி.எஸ்.டி.சாலை ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், காரனைப்புதுச்சேரி கொளப்பாக்கம் – வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை உதயா கருணாகரன், ஒன்றிய குழு தலைவர் ஜெ.வி.எஸ்.ரங்கநாதன். குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் படப்பை பஜார் வீதி படப்பை ஆ.மனோகரன், திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் – ஓ.எம்.ஆர்.சாலை ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், கேளம்பாக்கம், கானத்தூர், கோவளம், படூர், முட்டுக்காடு, நாவலூர், தையூர், இள்ளலூர், வெண்பேடு, நெல்லிக்குப்பம், மேலையூர் மாம்பாக்கம் – வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புச்செழியன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

மேலக்கோட்டையூர், பொன்மார், சோனலூர், கொளத்தூர், பனங்காட்டுப்பாக்கம், காயார், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், வெளிச்சை திருப்போரூர் தெற்கு ஒன்றியம் தண்டலம் பேருந்து நிலையம் பையனூர் எம்.சேகர், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் நெய்குப்பி ஊராட்சி அனுபுரம் – சட்ராஸ் சாலை ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி. செங்கல்பட்டு சாலை வெ.விஸ்வநாதன் மாவட்ட பொருளாளர் ஆர்.டி.அரசு திமுக அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், தோழர்கள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல், திம்மசமுத்திரம் ஊராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராம் பிரசாத், பாலாஜி, மோகனா இளஞ்செழியன், வளர்மதி, ரமேஷ், கலந்து கொண்டனர்.

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர், பரந்தூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, ஒன்றிய அரசை கண்டித்து பேசினார். இதில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராத், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். இதில், அறங்காவலர் குழு மாவட்ட கவுன்சிலர் சிவராமன், கவுன்சிலர் சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி, துணைத் தலைவர் நந்தா, ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல்,மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சத்திய சாய் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கினார் ஊராட்சியில் தேவிய அரசு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். இலத்தூர் ஒன்றியம் வெளிக்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெளிக்காடு ஏழுமலை தலைமையிலும் திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

நெம்மந்தம் ஊராட்சி மன்றத் தலைவர் புதுப்பட்டு மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சிக் கொடியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் சிறுபேர்பாண்டி, மின்னல் சித்தாமூர் ஆகிய ஊராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், குன்றத்தூர் வடக்கு ஒன்றியத்தில் டி.ஆர்.பாலு எம்பி, ஏ.வந்தேமாதரம் தலைமையிலும், புனிததோமையர்மலை வடக்கு ஒன்றியத்தில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஜி.கே.ரவி தலைமையிலும், காட்டாங்கொளத்தூர் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் மாவட்ட துணை செயலாளர் து.மூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன் தலைமையிலும், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் வெ.விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஒன்றிய அவைத்தலைவர் மு.சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலும், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புசெழியன் தலைமையிலும், திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஒன்றிய அவைத்தலைவர் இ.திருமலை தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேலும், ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் ஜெ.சிவபாதம் தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ந.கோபால், ஒன்றிய அவைத்தலைவர் இ.மோகனன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தாமல், திம்மசமுத்திரம் ஊராட்சியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கையும், உழைத்த 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு உரிய நிதி ஒதுக்குவதில் மெத்தனமாக இருப்பதை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ₹4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.4034 கோடி நிதி வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: