₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல், மார்ச் 30: நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு புதிய சந்தை வளாகத்தில் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடந்து வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஆட்டு சந்தைக்கு நேற்று கொல்லிமலை, மோர்பாளையம், பவித்திரம், மாணிக்கம்பாளையம், வையப்பமலை, கொல்லிமலை, ராசிபுரம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் சுமார் 1000 ஆடுகளை விற்பனைக்கு நேற்று காலை கொண்டு வந்திருந்தனர். இந்த ஆடுகளை வாங்கிச் செல்ல திண்டுக்கல், உசிலம்பட்டி, தேனி மதுரை, தொட்டியம், பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆடுகளின் எடையை பொறுத்து, விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்தனர். காலை 4 மணிக்கு கூடிய ஆட்டு சந்தை காலை 8 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். சுமார் ₹1 கோடிக்கு நேற்று ஆடுகள் விற்பனைசெய்யப்பட்டது.

The post ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: