திருச்செங்கோடு, டிச. 12: திருச்செங்கோடு அருகே கந்தம்பாளையத்தை அடுத்த கவுண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (28). பிஇ பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே வங்கியில் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையை சேர்ந்த தியாகராஜன் மகன் சிவானந்தம்(29) என்பவரும் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் இரவு, இருவரும் டூவீலரில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். டூவீலரை முத்துகிருஷ்ணன் ஓட்டி சென்றார். அப்போது எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரை ஓட்டி சென்ற முத்துகிருஷ்ணன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சிவானந்தம் பலத்த காயமடைந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த எலச்சிபாளையம் போலீசார், முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது டூவீலர் மோதி தனியார் வங்கி ஊழியர் பலி
- திருச்செங்கோடு
- சிவகுமாரின்
- கண்டிப்பாளையம்
- கந்தம்பாளையம்
- முத்து கிருஷ்ணன்
- ராசிபுரம், புதுப்பாளையம்...
