நாமக்கல், டிச.19: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி எம்பிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பினை வரவேற்று, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பூங்காரோட்டில் உள்ள காந்தி சிலை முன் மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்பு தெரிவித்தனர். மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், நகர தலைவர் மோகன் மற்றும் வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல்லில் மெழுகுவர்த்தி ஏற்றி நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரசார் வரவேற்பு
- காங்கிரஸ்
- நாமக்கல்
- தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- சோனியா காந்தி
- ராகுல் காந்தி
- தேசிய ஹெரால்டு
- கிழக்கு மாவட்டம்…
