காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு: விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சட்டசபையில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் (அதிமுக) பேசுகையில், காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவு படுத்தினால் புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகள் பயனடைவார்கள். இதை விரைந்து முடிக்க வேண்டும், எனபதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்றார்.

இதற்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இந்த பணிக்காக கடந்த 2022ல் ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ.116 கோடி செலவு செய்யப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் ரூ.176 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ.128 கோடி செலவு செய்யப்பட்டு 86 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை ரூ.33 கோடி செலவு செய்யப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

நிலமெடுக்கும் பணிகள் 96 சதவீதம் முடிவுற்ற கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் எட்டு சிப்பங்களாக பிரித்து ரூ.376 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கட்டம்-2 மற்றும் கட்டம்-3 ஆகிய திடப்பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் அதனால் நிறைவேற்றாமல் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு: விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: