உசிலம்பட்டி: முல்லை பெரியாறு அணை குறித்து எம்புரான் திரைப்படத்தில் வரும் சர்ச்சை காட்சிகள், வசனங்களை நீக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணை குறித்து பல்வேறு சர்ச்சையான வசனங்களும், அணையை இடிக்க வேண்டும் என காட்சியமைப்பும் உள்ளதாகவும், இரு மாநில மக்களிடையே பிரச்னையை தூண்டும் வகையில் உள்ள அவற்றை நீக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58ம் கால்வாய் பாசன சங்கம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்டவை இணைந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்புரான் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது, தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, எம்புரான் திரைப்படத்தின் இயக்குனர் ப்ரித்திவிராஜ், நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் கோபாலன் ஆகியோரின் புகைப்படங்களை செருப்பால் அடித்து, கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டி நகர் போலீசார், கிழிக்கப்பட்ட புகைப்படங்களை போராட்டக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
The post முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை ‘எம்புரான்’ பட வசனம் நீக்க விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.