பழநி கோயிலில் ‘பபே’ அன்னதானம்

பழநி: பழநி கோயிலில் நேற்று முதல் பபே அன்னதானம் வழங்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கூட்ட நேரங்களில் பக்தர்கள் உணவருந்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் உணவருந்த காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான கூடத்தின் அருகில் இருக்கும் திருக்கல்யாண மண்டபத்திற்கும் அன்னதானம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இங்கு பபே முறையில் பக்தர்களுக்கு கலவை சாதம் மற்றும் பொரியல் பாக்கு மட்டை தட்டில் வைத்து வழங்கப்படுகிறது. அன்னதான மண்டபத்தில் வழக்கம்போல் அரிசி சாதம், சாம்பார், ரசம், பொரியல், தயிர் உள்ளிட்டவை வழங்கப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பழநி கோயிலில் ‘பபே’ அன்னதானம் appeared first on Dinakaran.

Related Stories: