பின்னர் ரஜிதா குழந்தைகளுடன் தயிர் சாதம் சாப்பிட்டார். அதில் அவர் விஷம் கலந்ததாக தெரிகிறது. இதனால் சிறிதுநேரத்தில் 3 குழந்தைகளும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்தனர். இதேபோல் ரஜிதாவும் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சென்னையா, உடனடியாக 4 பேரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 3 பிள்ளைகளும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மூன்று குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஜிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்; உணவில் விஷம் கலந்து 3 குழந்தைகள் கொலை: தாய் கவலைக்கிடம் appeared first on Dinakaran.