புதுடெல்லி: மே 1-ம் தேதி முதல் ஏடிஎம்மில் பரிமாற்ற கட்டணங்களை உயர்த்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இலவச மாதாந்திர பரிவர்த்தனைகளை மீறும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்-மில் கார்டு மூலம் பணம் எடுத்தல், ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம். கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மில் 5 முறையும் இதர வங்கிகளின் ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களுக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு 5 முறையும் இலவசமாக பயன்படுத்தலாம். மே 1ம் தேதி முதல் இலவச மாதாந்திர பரிவர்த்தனைகளை மீறும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக ஏடிஎம்மை பயன்படுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணம் ரூ. 21 ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மே 1ம் தேதி முதல் ஏடிஎம்மில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வசூல் appeared first on Dinakaran.