கமேனி விவகாரத்தில் மவுனம் காக்கும் இந்தியா அமெரிக்க, இஸ்ரேலிய நண்பர்களை பகைக்க பிரதமர் மோடி விரும்பவில்லை: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சலுகைகளுக்கு ஆட்பட்ட ஒரு பிரதமர் தனது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நண்பர்களை பகைத்துக்கொள்வதை நிச்சயமாக தவிர்க்கவே விரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,”வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து இந்தியா சரியாகவே கண்டித்துள்ளது. ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் முதன்முதலில் தொடுத்த தாக்குதல் குறித்து மட்டும் இந்தியா முழுமையாக மவுனம் காத்து வருகின்றது. ஈரானின் அரசியலமைப்பு ரீதியான நாட்டுத் தலைவரான அயதுல்லா அலி கமேனி பிப்ரவரி 26ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார். பிரதமர் மவுனம் காக்கிறார். வெளியுறவு துறை அமைச்சரும் மவுனம் காக்கிறார். நாடாளுமன்றத்தில் இது குறித்த இரங்கல் குறிப்பு எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. இந்த ஆண்டில் இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரானும் ஒரு அங்கம் என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: