புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் காஸ் முன்பதிவுக்கு மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், ‘மார்ச் 5 ஆம் தேதி முதல் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஏற்கனவே 30 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே யாரும் பதற்றத்துடன் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஈரான் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சராசரியாக 55.7 லட்சமாக இருந்த எல்பிஜி முன்பதிவுகளின் எண்ணிக்கை, தற்போது 75.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மக்கள் பதற்றத்துடன் முன்பதிவு செய்வதையே காட்டுகிறது’ என்றார்.
நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு சமையல் காஸ் முன்பதிவுக்கு அவசரப்பட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- புது தில்லி
- யூனியன் அரசு
- சுஜாதா சர்மா
- தொழிற்சங்க பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் இணை
