அப்போது ரூ.4 ஆயிரத்து 500 ரூபாய் நல்ல நோட்டுகளாக இருந்தது. மீதியுள்ள ரூ.8,500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருப்பதாக வங்கியின் மேலாளர் குட்டி கண்ணனுக்கு குறுஞ்செய்தி சென்றது.
இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர், ஏடிஎம் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கள்ள நோட்டு ரூ.8,500 இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கள்ள நோட்டுகள் யார் செலுத்தியது?. எந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிவகிரி எஸ்பிஎஸ் தெருவை சேர்ந்த மூங்கில் வியாபாரி ராமு (50) என்பவர் கள்ள நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி மேலாளர் குட்டிக்கண்ணன் சிவகிரி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிந்து ராமுவை கைது செய்து விசாரணை நடத்தினர். ராமு மூங்கில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 24ம் தேதி அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மூங்கில் வாங்கிக் கொண்டு அதற்கான தொகை ரூ.13 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதனை தனது வங்கிக்கணக்கில் ஏடிஎம் மூலம் ராமு செலுத்தியுள்ளார்.
இதையடுத்து ஏடிஎம் மிஷினில் செலுத்தப்பட்ட கள்ள நோட்டு மூங்கில் வாங்கிச் சென்ற முருகன் கொடுத்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முருகனை பிடிக்க அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதிக்கு சென்றனர். ஆனால் போலீஸ் தேடுவது அறிந்து முருகன் ஓடிவிட்டார். தலைமறைவான முருகன், கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவரா? அல்லது தவறுதலாக கள்ள நோட்டை கொடுத்து சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிவகிரி அருகே ஏடிஎம் மிஷினில் கள்ளநோட்டை செலுத்திய மூங்கில் வியாபாரி கைது appeared first on Dinakaran.