நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி அவரது மகனும் நடிகருமான பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சிவாஜியின் பேரன் துஷின் பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நீக்க கோரி பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில் தனது தந்தை உயிருடன் இருந்த போதே அன்னை இல்லத்தை தனக்கு உயில் எழுதி வைத்து பத்திரம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகோதரர் ராம் குமார் தொடர்புடைய நிதி பிரச்சனையில் தனது வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும். வீட்டில் ராம் குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால் ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

 

The post நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: