நீலகிரிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமல்

நீலகிரி: திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஐகோர்ட் உத்தரவு படி இன்று நள்ளிரவு முதல் ஜூன் இறுதி வரை சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்கு வர கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே கடந்த மே 7 முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ பாஸ் அனுமதி எனவும் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனம், ஆம்புலன்ஸ், அவசரக்கால வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: