திருத்தணி: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாளான நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகனங்களிலும் மற்றும் திருப்படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் மாட வீதியில் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.100 சிறப்பு கட்டண மார்கத்தில் சுமார் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி கந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோடை வெயிலுக்கு பக்தர்களுக்கு பாதிப்பின்றி மாட வீதியில் மேட் அமைத்து தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது. மேலும், வரிசையில் சென்ற பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், பக்தர்கள் தற்காலிக பந்தல்களில் வரிசையில் சென்று பாதிப்பின்றி சாமி தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.