நீடாமங்கலம், மார்ச்.28: நீடாமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொரூள்கள் அழிப்பு.திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுரையின் கீழ், நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கடைகளில் புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நீடாமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலையில் நீடாமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகபெருமாள் சுகாதார ஆய்வாளர்கள் குழு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருள்கள் தடைசெய்யப்பட்டது என்ற விளம்பர பலகை வைக்காத 8 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட,பிளாஸ்டிக் பொருள்கள் 12 கிலோ கைப்பற்றிகாவல்துறை உதவியோடு அழிக்கப்பட்டது.
The post நீடாமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு appeared first on Dinakaran.
