இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 25,769 மாணவர்கள் எழுத ஏற்பாடு

 

விருதுநகர், மார்ச் 28: விருதுநகர் மாவட்டத்தில் 25,769 மாணவ, மாணவியர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்.15 வரை நடைபெறுகிறது. இன்று தமிழ், ஏப்.2 ஆங்கிலம், ஏப்.4 விருப்பப்பாடம், ஏப்.7 கணிதம், ஏப்.11 அறிவியல், ஏப்.15 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் உள்ள 357 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 117 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 168 பள்ளிகளை சேர்ந்த 10,895 மாணவ, மாணவியர் 54 தேர்வு மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். சிவகாசி கல்வி மாவட்டத்தில் 189 பள்ளிகளை சேர்ந்த 14,874 மாணவ, மாணவியர் 63 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். இரு கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 25,769 மாணவ, மாணவியர் 117 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு தேர்வில் 290 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைத்தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாத, டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி, சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 25,769 மாணவர்கள் எழுத ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: