கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, மார்ச் 27: அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு தாலுகா போலீசார் சென்னிமலை ரோடு, டீசல் ஷெட் அருகில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் (எ) புறா சரவணன் (29), என்பதும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: