ஈரோடு,மார்ச்24: சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் நேற்று ரத்த தானம் வழங்கினர். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் நவீன்குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் அமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவர் ஸ்டாலின்குணசேகரன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளர் பிரபு, மாவட்ட குழு உறுப்பினர் ராசன் உள்ளிட்ட நிர்வாகள் கலந்துகொண்டனர்.முகாமில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர்.
The post பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுதினம் இளைஞர் பெருமன்றத்தினர் ரத்ததானம் appeared first on Dinakaran.