புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

 

சத்தியமங்கலம், மார்ச் 26: பவானிசாகர் அருகே விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிச்செட்டிப்பாளையம் சப்- கலெக்டர் சிவானந்தம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்டு கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கல்குவாரிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதாக எழுத்து மூலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் எழுத்து மூலம் வழங்கிய நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: