ஈரோடு, மார்ச் 25: சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு மூர்த்தி பாளையம் ஆறுமுகம் மகன் சிதம்பரம் (39). லாரி டிரைவர். இவருக்கு ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் சிறுமிக்கு காதல் ஆசை வார்த்தை கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரூர் வெங்கமேட்டில் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என கொடுமுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணையில் சிறுமிக்கு திருமணம் ஆனதும், 9 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய சிதம்பரத்தின் மீது கொடுமுடி போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.