மகளிர் சுயஉதவிக்குழு கடனை திரும்ப செலுத்த காலஅவகாசம் மாதர் சங்கம் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், மார்ச் 28: கோடிமுனை அனைத்து இந்திய மாதர் சங்க கிளை சார்பில், உஷா பாசி தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கோடி முனையில் வசித்து வருகிறோம். மீன் பிடி தொழில் இல்லாத காலங்களில் குடும்ப செலவிற்காக 14 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்றிருந்தோம். இந்த கடனுக்கான தவணை தொகையை கடந்த ஜனவரி மாதம் வரை திரும்ப செலுத்தி விட்டோம். தற்போது, தட்டுமடி மற்றும் இரட்டை மடி வலைககளை பயன்படுத்தி, வசதி மிக்கவர்கள் மீன்களை பிடித்து விடுவதால், நாட்டு படகில் சென்று மீன் பிடிக்கும் எங்கள் வீட்டு ஆண்களுக்கு மீன்பாடு குறைந்து விட்டது. இதனால், வருவாயும் இல்லை. இதனால் சுயஉதவிக்குழு கடன் தவணைத்தொகையை குறித்த காலத்தில் செலுத்த முடியவில்லை. இந்த கடன் தொகையை ேகட்டு வருபவர்கள் காலை முதல் இரவு வரை எங்கள் வீட்டு முன்பு இருப்பதால், பெண்களாகிய நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். எனவே இந்த கடன் தொகை திருப்பி செலுத்த 6 மாதம் கால அவகாசம் பெற்றுத் தருமாறு ேகட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மகளிர் சுயஉதவிக்குழு கடனை திரும்ப செலுத்த காலஅவகாசம் மாதர் சங்கம் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: