தென்காசி, மார்ச் 28: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஏப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தென்காசி நாடார் சங்கம் சார்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்குகின்றனர். தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயில் 1990ம் ஆண்டு புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பிறகு 35 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறையாக வருகின்ற ஏப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பொருளாகவும், பணமாகவும் நன்கொடை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கும்பாபிஷேக பணிகளுக்காக தென்காசி நாடார் சங்கத்தினர் ரூ.15 லட்சம் நன்கொடை வழங்குகின்றனர். முதற்கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கி உள்ள நிலையில் எதிர்வரும் 3ம்தேதி மேலும் ரூ.5 லட்சம் வழங்க இருக்கின்றனர். இந்த நிதியை கொண்டு யாகசாலை அமைக்கப்பட்டு அதில் 91 யாக குண்டங்கள் கட்டப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. முதற்கட்ட நிதியாக ரூ.10 லட்சத்தை சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆகியோர் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.
The post தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் யாகசாலை பணிகளுக்கு நாடார் சங்கம் ரூ.15 லட்சம் நிதி appeared first on Dinakaran.
