இதையடுத்து அந்த 17 வயது சிறுமி, சந்தோஷிடம் நமது காதல் வீட்டிற்கு தெரிந்து விட்டதால் பிரச்னை எழுந்துள்ளது. எனவே இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சந்தோஷ் அதனை ஏற்காமல் தொடர்ந்து அந்த சிறுமிக்கு காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2.08.2024 அன்று சந்தோஷ் மீது சிறுமியின் தாயார், பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சந்தோஷ் தன்னை போனில் அவதூறாக பேசி மிரட்டுவதாக கூறியிருந்தார். இதனை விசாரித்த பரமக்குடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கினை முடித்ததாக தெரிகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து சந்தோஷால் பிரச்னை வந்ததால் தனது மகளை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டிற்குள் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது சிறுமி உடலில் தீ பற்றி எரிந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வீட்டுக்கு இரண்டு வாலிபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘கடந்த 23ம் தேதி நான் பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்தார். தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் போலீசார், சந்தோஷ் (21) மற்றும் அவரது நண்பரான பரமக்குடியை சேர்ந்த முத்தையா (20) இருவர் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
The post காதலிக்க மறுத்த சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.