வெலிங்டன்: நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையிலான, 5வது டி20 போட்டி நேற்று நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீசியது. அதனால் முதலில் களம் கண்ட பாக் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டும் எடுத்தது. அதனையடுத்து 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்ஃபேர்ட், ஃபின் ஆலன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன் குவித்தனர். ஆலன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த டிம் 97 ரன் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதனால் நியூசி 10 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 131 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து டி20 தொடரை கைப்பற்றி உள்ளது.
The post 5வது டி20யில் அபார வெற்றி: பத்து ஓவரில் பாக்.கின் சத்தம் அடக்கிய நியூசி appeared first on Dinakaran.