8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்திய கொல்கத்தா

கவுகாத்தி: ஐபிஎல் 6வது லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை கொல்கத்தா அணி வீழ்த்தியது. ஐபிஎல் 6வது லீக் போட்டி, கவுகாத்தியி ல் நேற்று நடந்தது. அதில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். 4வது ஓவரில் சஞ்சு சாம்சன்(13 ரன்)வெளியேறினார். கேப்டன் ரியான் பராக், 25 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனால், 9 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன் மட்டுமே எடுத்து தடுமாறியது. தொடர்ந்து, 10வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி, வனிந்து ஹசரங்காவை 4 ரன்னில் வீழ்த்தினார்.

11வது ஓவரை வீசிய மொயீன் அலி, நிதிஷ் ராணாவை, 8 ரன்னில் கிளீன் போல்ட் செய்தார். அதையடுத்து, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, சுபம் துாபே, இம்பாக்ட் மாற்று வீரராக உள் நுழைந்தார். அவரும் சிறிது நேரத்தில் வைபவ் அரோரா பந்தில், ஆண்ட்ரூ ரஸ்ஸலிடம் கேட்ச் தந்து, 9 ரன்னில் வெளியேற, கொல்கத்தா வீரர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஷிம்ரன் ஹெட்மையர் களமிறங்கினார். 19வது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த துருவ் ஜுரெலை (33 ரன்) கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹெட்மையர், ரகுவன்ஷியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய கடைசி ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் (16 ரன்) கிளீன் போல்டானார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா தலா 2, ஜான்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.
இரண்டாவது இன்னிங்சை துவங்கிய கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டிகாக் 97 ரன்(61 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 22 ரன், ரகானே 18 ரன் விளாசினர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசரங்கே மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார். நேற்றைய போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

The post 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்திய கொல்கத்தா appeared first on Dinakaran.

Related Stories: