மியாமி
அமெரிக்காவின் மியாமி நகரில், மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார். அற்புதமாக ஆடிய ஜோகோவிச், 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் செக் வீரர் ஜேகுப் மென்சிக், உலகின் 4ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் மென்சிக், 7-6, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து, ஜோகோவிச் – மென்சிக் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. ஏற்கனவே, ஏடிபி போட்டிகளில் ஜோகோவிச் 99 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இன்றைய போட்டியில் அவர் வென்று, சாம்பியன் பட்டங்களில் சதம் அடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டங்களில் சதமடிப்பாரா ஜோகோவிச்? appeared first on Dinakaran.