சென்னையில் உலக அளவிலான டபிள்யுடிடி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அச்சந்தா சரத் கமல்/ஸ்னேகித் சுரவாஜ்ஜூலா இணை, ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லும்/ஃபின் லூவ் இணையுடன் மோதியது. இரண்டு தரப்பும் சமமான பலத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் கூடுதல் வேகம் காட்டிய இந்திய இணை 11-6, 7-11, 13-11, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கால் இறுதிக்கு முன்னேறியது.
The post காலிறுதியில் சரத் கமல் இணை appeared first on Dinakaran.