எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம் ரூ.65 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கோவில்பட்டி கடம்பூர் ராஜு (அதிமுக) பேசியதாவது: பாரதியார் வீட்டின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. அதை செய்தி துறை அமைச்சர் கவனித்து, அந்த நினைவு இல்லம் மட்டுமல்லாமல், அனைத்துத் தலைவர்களுடைய நினைவு மண்டபங்களையும் சிறப்பாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம் 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. எனவே, அதனை புதுப்பிக்க வேண்டுமென்று சொன்னார்கள். புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஏறத்தாழ ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அந்த கட்டிடம் புதுப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விரைவில் அந்த பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம் ரூ.65 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: