புதுச்சேரி: புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.