கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக லாரியில் கடத்தப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது

ஓசூர்: கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக தர்பூசணி பழங்களுக்கு மத்தியில் வைத்து கடத்தப்பட்ட எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். கேரளாவுக்கு கடத்தப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயத்தை மது விலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலக்காட்டைச் சேர்ந்த சஜித், பாபுராஜ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து சேலம் மத்திய மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று இரவு ஓசூர் கிருஷ்ணகிரி சாலை தர்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரியில் வந்த இருவரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை பிடிக்க முயன்ற போது தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்க தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 215 கேனில் இருந்த 7,525 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இந்த எரிசாராயம் பரிமுதலை தொடர்ந்து கைது சேவித்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக லாரியில் கடத்தப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: