புதுவை, காரைக்காலில் 53 கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்

 

காரைக்கால், மார்ச் 26: புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 53 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புதுச்சேரி தொழில் மையத்தில் பணியாற்றி வரும் நிர்மலா, பள்ளி கல்வித்துறைக்கும், அங்கு பணி புரிந்து வரும் வளர்மதி, மாவட்ட தொழில் மையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காரைக்கால் மின் துறையில் பணியாற்றி வரும் சீனிவாசன், கூனிச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை செயலகத்துக்கும், மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் பணிபுரிந்து வரும் ஸ்டீபன் (எ) சுரேஷ், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபாகரன் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தமாக 53 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் (பணியாளர் பிரிவு) ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

The post புதுவை, காரைக்காலில் 53 கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: