திருமங்கலம், மார்ச் 26: திருமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சர்வீஸ்ரோடு அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. திருமங்கலம் மதுரை விமானநிலையம் ரோட்டில் ரயில்வே கேட் அருகே புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பாலத்தினை ஒட்டி புதியதாக தேவர் சிலையிருந்து காமராஜபுரம் வரையில் ரயில்வே பீடர் ரோட்டில் சர்வீஸ்ரோடு அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வீஸ்ரோடு அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
திருமங்கலம் யூனியன் அலுவலகம் எதிரே புதியபாலத்தின் அருகே அமையும் சர்வீஸ்ரோட்டில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்போட்டு சர்விஸ் ரோடு சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் யூனியன் அலுவலகம் அருகேயும் விரைவில் சர்வீஸ்ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும் என தெரியவந்துள்ளது. மேம்பாலத்துடன் புதிய சர்வீஸ் ரோடுகள் இருபுறமும் அமைப்பதால் பாலத்தில் செல்வோர் தவிர்த்து சோனைமீனாநகர், பாண்டியன் நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் சர்வீஸ்ரோட்டினை பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி ஸ்டார்ட் appeared first on Dinakaran.
