பெங்களூரு: கர்நாடகாவில் பெஸ்காம் உள்பட ஐந்து மின் வினியோக நிறுவனங்கள் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான ஸ்மார்ட் மீட்டர்கள் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இதனிடையே விதிமுறைகளை மீறி வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்துள்ளதாகவும், டெண்டர் மூலம் கொள்முதல் செய்ததில் ரூ.15,568 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாரதிய ஜனதா கட்சி, டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல்படி ஸ்மார்ட் மீட்டர் கட்டாயமாக்க சட்டத்தில் இடமில்லை. என்ற விதிமுறை உள்ளது. இதை மீறி 5 மின் வினியோக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
The post ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ரூ.15 ஆயிரம் கோடி முறைகேடு: கர்நாடகா அரசு மீது பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.