காஞ்சிபுரம், மார்ச் 26: தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுச்திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம், திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருத்தணி சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். இவருக்கு சுவாதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதிக்கு, 62 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில், பச்சிளம் குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு தாய் சுவாதி, தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, மூச்சு திணறி குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் அக்குழந்தையை வீட்டில் வைத்து தம்பதியர் நாட்டு வைத்தியம் பார்த்துள்ளனர். இருப்பினும், குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததால், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததை உறுதிப்படுத்தினர். தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி 62 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி appeared first on Dinakaran.