வேளாண் கண்காட்சியில் பங்கேற்க காஞ்சி விவசாயிகளுக்கு அழைப்பு

காஞ்சிபுரம், டிச.19: தமிழ்நாடு அரசு, விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் நலனை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோயிலூர் தனியார் மைதானத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னனி ஏற்றுமதியாளர்கள், சிறப்பாக செயல்படும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துபவர்கள் ஆகியோர், தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சி கூடங்களில் காண்பிக்க விரும்பினால் https://www.tnagrisnet.tn.gov.in/agriExpo/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட இணையதளத்தில் கண்காட்சி கூடங்கள் அமைப்பதற்கு பதிவு மேற்கொள்ள 22.12.2025 கடைசி நாள் ஆகும். மேலும், விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு, விவசாய கண்காட்சியில் கலந்துகொண்டு பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: