சிவகங்கை, மார்ச் 26: சிவகங்கையில் தமிழவைய வாசிப்பு வட்டம் நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிவகங்கை தமிழவைய நிர்வாகி வித்யா கணபதி முன்னிலை வகித்தார். தமிழாசிரியை ஜெயபிரியா வரவேற்றார். ஆசிரியர் பாலமுருகன் எழுத்தாளர் முகில் எழுதிய நீ இன்றி அமையாது உலகு எனும் கட்டுரை நூலை அறிமுகம் செய்து அதன் உட்தலைப்புகளை விவரித்துப் பேசினார். கவிஞர் மகாபிரபு பட்டாசு எனும் கவிதை நூல் குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்தும், அது எழுதப்பட்ட சூழல் குறித்தும் பேசினார். இன்றைய புதுக்கவிதைகளோடு அன்றைய குறுந்தொகை பாடல்களை ஒருங்கிணைத்து புலவர் காளிராசா பேசினார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஈஸ்வரன், முன்னாள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன், தமிழாசிரியர்கள் லோகமித்ரா, ராஜலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர் கனகா, நித்யானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
The post வாசிப்பு வட்ட நூல் அறிமுக நிகழ்ச்சி appeared first on Dinakaran.
