மதுரை: அம்ரூத் திட்டத்தீன்கீழ் குடிநீர் குழாய் இணைப்புக்கு கட்டணமில்லை என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. குழாய்கள் பதிக்கவும், வீட்டு இணைப்புகள் வழங்கவும் எவ்வித கட்டணமும் இல்லை. குடிநீர் விநியோகத்திற்கு பின்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.