இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்து கடந்த பிப்ரவரி மாதமே சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலானது கடற்கரை – செங்கல்பட்டு இடையே விரைவு ரயில் (FAST) தடத்தில் இரு சேவைகள், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவை இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏசி மின்சா ரயில் புறப்படும் நேரம்:
முதலில் இந்த ஏசி மின்சா ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். அதன்பிறகு சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கும் சென்றடையும்.
அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டும் செல்லும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் செல்லும்.
The post சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
