புதுக்கோட்டையில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பக்கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, மார்ச் 25: புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 மற்றும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் நேற்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 மற்றும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். கட்டணங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை கார்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விடக்கூடாது.

ஆட்டோ செயலிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முழுக்கங்களாக எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.

The post புதுக்கோட்டையில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பக்கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: